பிரதமர் மோடியின் முடிவு தவறானதா.? பாஜக எம்.பி டிவீட்.!

Default Image

நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை எம்பியுமான சுப்ரமணியம் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ நீட் / ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதை தாமதபடுத்துவது, மாணாவர்களின் படிப்புகளை கடுமையாக பாதிக்கும் என்று ஐஐடி டெல்லி இயக்குனர் கூறுகிறார். ஆனால், கொரோனா ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. னவே, இந்த விஷயத்தில் பிரதமர் முடிவு தவறானதா? இன்றும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.’ என டிவிட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்