ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது – மத்திய கல்வித்துறை அமைச்சர்.!
ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, இன்று முதல் 6 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், இந்த கொரோனா சூழலில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தேர்வின் போது எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளார். அதற்கு நாம் அனைவரும் கூட்டமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஜேஇஇ தேர்வுக்கு 8 புள்ளி 58 லட்சம் பேர் விண்ணப்பித்த இருந்த நிலையில் அதற்கான அனுமதி அட்டையை 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், நீட் தேர்வுக்காக 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்த இருந்த நிலையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதற்கான அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களது எதிர்காலம் கருதியும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும். மாநில முதல்வர்கள் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.