பள்ளி மாணவர்களுக்கு போக்ஸோ சட்டத்தை கற்று கொடுக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள்தெரிந்து கொள்ள வேண்டும். – பெங்களூரு உயர் நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுரை.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் சீண்டல்களுக்கு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவோர் மீது பதியப்படும் சட்டம் தான் போக்ஸோ சட்டம். இந்த சட்டம் பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, நீதிபதி அமர்வு, சமீப காலமாக பாலியல் வழக்குகள் அதிகரித்து இருப்பதன் காரணமாக 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு போக்ஸோ சட்டம் பற்றி கற்பிக்க வேண்டும் எனவும்,
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள்தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், கர்நாடக அரசுக்கு அம்மாநில பெங்களூரு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.