கொரோனாவின் நிலை மாறும் வரை தேர்வுகளின்றி மாணவர்களுக்கு கல்வியாண்டு தேர்ச்சி!
கொரோனாவின் நிலை மாறும் வரை மேற்கு வங்கத்தில் தேர்வுகளின்றி மாணவர்களுக்கு கல்வியாண்டு தேர்ச்சி கொடுக்கப்படும் என இடைநிலை கல்வி வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கு, வணிக வளாகங்கள் என அனைத்துமே மூடப்பட்டது. தற்பொழுது இரு மாதங்களாக மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆங்காங்குள்ள மாநிலங்களில் அவர்கள் இடங்களில் உள்ள கொரோனாவின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளையும் கட்டுப்பாடுகளுடன் திறக்கின்றனர்.
மேற்கு வங்கத்திலும் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறந்தாலும் கொரோனாவின் நிலை மாறும்வரை மாணவர்கள் 6 முதல் 9 வகுப்பு வரை எவ்வித தேர்வும் இன்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மேற்கு வாங்க இடைநிலை கல்வி வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.