இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லுரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லுகளில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை.
இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் இறுதித் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு நடத்தப்படவில்லை, எனவே மற்ற பாடங்களில் பெறப்பட்ட சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் 11 ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் 1 முதல் 9 வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் என அறிவித்துள்ளனர். மேலும் சி.பி.எஸ்.இயில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல்-பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…