பிரதமர் மோடி பற்றிய ஆவணப்பட தடையும்… டெல்லி கல்லூரி மாணவர்களின் போராட்டமும்…

Default Image

பிரதமர் மோடி குறித்த ஆவண படத்தை திரையிட அனுமதி மறுத்ததால் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குஜராத்தில் கோத்ரா ரயில் இறப்பு சம்பவத்தில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் கலவரம் ஏற்பட்டது. அப்போது சுமார் 69 பேர் உயிரிழந்தனர். அந்தக் கலவரம் நடந்த சமயத்தில் குஜராத் முதல்வராக பொறுப்பில் இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. இது பற்றிய ஒரு ஆவண படத்தை ஓர் செய்தி நிறுவனம் தயாரித்து இருந்தது.

ஆவணப்பட அனுமதி : இந்த ஆவணப்படமானது தவறான சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது எனக்கூறி இந்த ஆவண படத்தை மத்திய அரசு தடை செய்து விட்டது. அந்த தடை செய்யப்பட்ட ஆவண படத்தை திரையிட டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மாலையில் திரையிட அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் பல்கலைக்கழகம் அதனை திரையிட அனுமதி மறுத்துவிட்டது.

மாணவர்கள் போராட்டம் : இதனை அடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு ஆவணப்படத்தை திரையிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்