#Breaking: 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி “ஆல் பாஸ்”- பஞ்சாப் முதல்வர் அதிரடி!

பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், சூழலை பொறுத்து ஒத்திவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025