ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்கள் மலைகள் மற்றும் மரங்களை ஏறுகிறார்கள்..அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ்.!
நேற்று நாடு முழுவதும் சுதந்திரத்தினம் கொண்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒடிசா கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் கூறுகையில், மாநிலத்தில் இணைய இணைப்பு குறைவாக இருப்பதால், கொரோனா காலத்தில் போது நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் பல மைல்கள் நடந்து செல்ல வேண்டும் எனவும், மலைகள் மற்றும் மரங்களை ஏறுகிறார்கள் என கூறினார்.
மாநிலத்தில் இப்போது சுமார் 22 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் கல்வி பெறுகின்றனர். மீதமுள்ள 38 லட்சம் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் கிடைக்காததால் இந்த வசதி பெறமுடியவில்லை என்று டாஷ் கூறினார்.
கொரோனா காரணமாக மார்ச் முதல் பள்ளிகள் மூடியதால் மாநில அரசு ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய இணைப்பு குறைவாக இருப்பதால் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடிந்தது என தெரிவித்தார்.