சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்கள்! முழு கட்டணத்தை திருப்பி அளிக்க யுஜிசி உத்தரவு!

UGC

கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100% கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு. 

நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி அளிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அளிப்பதில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து, பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 30க்குள் விலகும் மாணவர்களிடம் சேவை கட்டணமாக ரூ.1,000 மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானிய குழு (UGC) தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்