ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாம்.! கர்நாடக அரசு முடிவு.!

Hijab Karnataka

கர்நாடகாவில் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் , மாணவர்களிடத்தில் மிக பெரும் சர்ச்சையாக பேசப்பட்ட விவகாரம் என்றால் அது பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல கூடாது என்ற விவகாரம் தான் .

கடந்த வருடம் உடுப்பி அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத சென்ற போது கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இது பெரும் சர்சையாகவே , மாணவிகள் போராட்டம் கர்நாடக மாநிலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது.

பரபரக்கும் தெலுங்கானா தேர்தல் களம்.! முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக.!

இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாணவிகள், கல்வி நிறுவனங்களில் இருக்கும் சீருடைகளை மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் மாநில அரசாக உள்ளது. இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக கல்வி அமைச்சர் சுதாகர், முதல்வர் சித்தராமையா  உடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் கூறுகையில், கர்நாடகாவில் , அரசு நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி கல்லூரி தேர்வுகளிலும்  மாணவிகள் சுதந்திரமாக அவர்கள் விருப்பம் போல உடை அணிந்து தேர்வுகளை எழுதலாம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்