#Accident: பள்ளியில் 70 அடி உயரமுள்ள மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலி
இன்று(ஜூலை 8) சண்டிகரில் உள்ள 9வது செக்டார் பகுதியில் உள்ள கார்மல் கான்வென்ட் பள்ளியில் 250 வருடம் பழமை வாய்ந்த சுமார் 70 அடி உயரமுள்ள மரம் ஓன்று வேருடன் சாய்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார். மேலும் ,1 பணியாளர் மற்றும் 19 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
அதில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கபட்டுள்ளது.
இது பற்றி தகவல் பெற்ற நிலையில் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மேலும்,விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என உள்துறை செயலாளர் நிதின் யாதவ் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து ஏராளமான மாணவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு வந்துள்ளனர்.
Chandigarh | One student died, and 13 injured after a tree uprooted and fell on them at a school in Sector 9. The injured students are shifted to a hospital. Details awaited.
— ANI (@ANI) July 8, 2022