கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று ஷேஹலாவை கடித்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடன் கூறியுள்ளனர். ஆனால் ஆசிரியை ஷேஹலா பெற்றோர் அழைத்துச் செல்வார்கள் என கூறி பாடத்தைத் தொடர்ந்து நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஷேஹலா ஒரு மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பாம்பு கடித்ததில் விஷம் உடல் முழுவதும் பரவியதால் பரிதாபமாக ஷேஹலா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள அரசு விசாரணை நடத்தவும் , சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…