போராட்டங்கள் தனி நபரை பாதிக்கக்கூடாது – நீதிபதிகள் கருத்து..!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மற்றும் போராட்டத்தை அகற்ற கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் இந்த போராட்டத்தால் டெல்லியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விலைவாசி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் குறிப்பிட்ட சில சட்டத்திற்கு எதிராக போராடும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. போராட்டங்கள் ஒரு தனி நபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.
இன்று விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனு மீது முடிவெடுக்கப்படும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினார்.