வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஹரியானாவில் விவசாயிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத்தினர் சாலையை வழி மறித்து போராட்டம் நடத்தியைத்தடுத்து அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளை அழைத்திருந்தார்.
இதுபோன்று பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் இளைஞர் அணியினர் நடத்தி வரும் டிராக்டர் பேரணி பஞ்சாப் மொகாலி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பேரணி தேசிய நெடுஞ்சாலை வழியாக அம்பாலாவை சென்றடைந்தது. மேலும் வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வரும் 25-ஆம் தேதியும் விவசாய அமைப்புகளின் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. விவசாயிகளின் போராட்டத்தையொட்டி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…