திறந்த இரண்டாம் நாளே ஜும்மா மசூதியில் போராட்டம்..!
- மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
- இதனைத்தொடர்ந்து, டெல்லி ஜூம்மா மசூதிக்கு தொழுகைக்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தற்பொழுது குடியுரிமை சட்ட திருப்பு மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாள்தோரும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதி, 135 நாட்களுக்கு பிறகு, அதவாது நேற்றைய முந்தினம் மசூதி திறக்கப்பட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
‘135 நாட்களுக்கு’ பிறகு ஸ்ரீநகரில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி திறப்பு.!
டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி செல்ல முடிவுசெய்யப்பட்டது. இதற்க்கு பீம் ராணுவ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் இந்த பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொழுகை முடிந்த பின்னர், அங்கிருந்த அனைவரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பேரணி, மாலை 5 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், தற்போதே அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். மேலும், இந்த பேரணிக்கு தலைமை தாங்கும் பீம் ராணுவ அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், அங்கு வந்தார். பேரணி நடக்கும் அனைவரையும் தடுக்க காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிறுவி வருகிறது.