தனி மாநில அந்தஸ்து கோரி ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம்….!!
ஆந்திர மாநிலத்துக்கு தனி அந்தஸ்து கேடு நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு தனிமாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திர மாநில ஆளும் கட்சி ஆதரவுடன் எதிர்கட்சிகள் இன்று பந்த் அறிவித்திருந்தன.இந்நிலையில் நடைபெறும் பந்_த்தையொட்டி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆந்திர மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலத்தின் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த பந்தின் காரணமாக பேருந்துகளும் இயக்கப்படாததால், சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த பந்திற்கு ஆளும் கட்சியான தெலுங்கு தேசமும் ஆதரவு தெரிவித்துள்ளதால் மக்களின் பாதிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.