கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா தலைமையில் கூட்டம் நடைபெற்றது , மாநிலம் முழுவதும் எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் நடத்த தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்யாணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள்,வீடுகளில் சுமார் 100 வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வெளிப்புறம் வைத்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இறுதிச் சடங்குகளில் பங்கேற்க 25 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதகர் மற்றும் புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) ஆணையர் கௌரவ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு, சுகாதார அமைச்சர் கே.சுதக்கர் ட்வீட் செய்துள்ளார், அதில் ஆம்புலன்ஸ் மற்றும் படுக்கைகள் கிடைப்பது, ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள பத்து ஹோட்டல்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்றும், லேசான அல்லது மிதமான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் அங்கு செல்லப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,859 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது.கர்நாடகாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,24,509 ஆக உள்ளது, அவற்றில் 1,07,315 செயலில் உள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…