கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர்.
மேற்கு வங்க மாநிலத்த்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது வரை அங்கு 24823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7705 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,16,291 பேர் குணமடைந்துள்ளனர்.827 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இன்று மாலை முதல் 7 நாட்களுக்கு அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.மேலும் கொரோனா குறித்து பயப்பட ஒன்றுமில்லை. நீங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் கொல்கத்தா ,ஹவுரா உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.