டெல்லியில் ஜி.பி.பண்ட் என்ற மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் பேசும்போதும், சில நோயாளிகளுடன் பேசும்போது மலையாளத்தில் பேசுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்றும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்றும் தங்களது தாய்மொழியை பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் எழுதியுள்ள இந்த சுற்றறிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் செவிலியர்கள் தங்களுடைய தாய் மொழியில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மருத்துவமனையில் கேரளாவை சேர்ந்த செவிலியர்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இருந்தும் பல செவிலியர்கள் பணிபுரிகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கைக்கு, மற்ற மாநிலங்களை சேர்ந்த செவிலியர்களும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…