சபரிமலை பக்கதர்களுடன் 480 கி.மீ வரை பாதயாத்திரை சென்ற தெரு நாய்..!
கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம் செய்ய இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஆந்திராவின் திருமலையில் இருந்து 13 அய்யப்ப பக்தர்கள் அடங்கிய குழு ஓன்று பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.இவர்களுடன் ஒரு தெரு நாயும் சேர்ந்து பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.
இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் , இந்த நாய் எங்களுடன் பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது.நங்கள் தயாரிக்கும் உணவை நாய்க்கு வழங்குவதாக கூறினர்.ஒரு முறை நாய் காலில் முள் குத்தியதால் கால்நடை மருத்துவரிடம் அனுமதித்தோம்.
மருத்துவர் சிகிக்சை அளித்தார்.அதன் பின் எங்களுடன் வராது என நினைத்தோம். ஆனால் அது எங்களை பின் தொடந்து வந்ததாக கூறினார். இது ஒரு புதிய அனுபவம் எனவும் கூறினார். தற்போது இந்த பக்தர்கள் சிக்கமகளூரு மாவட்டத்தின் கோட்டிகேஹராவை அடைந்துள்ளனர்.