Categories: இந்தியா

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

Published by
அகில் R

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “அச்சிறுவனை 6 தெருநாய்கள் சுற்றி வளைத்து தாக்கும், நீண்ட நொடிகளுக்கு பிறகு வீட்டில் இருந்து வெளிய வந்தவரை கண்டவுடன் அந்த தாக்குதலை நிறுத்தி விட்டு அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிடும்”.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனால் காயம் ஏற்பட்ட அந்த சிறுவன், அரசு மருத்துவாமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சிறு குழந்தைகள் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகவே இருந்து வருவதை தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீவிரமாகக் கண்டித்ததுள்ளது.

மேலும், தெருநாய்களின் தொல்லையால் சிறுவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், இந்த பிரச்னைக்கு தீர்வு காண தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

5 minutes ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

18 minutes ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

53 minutes ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

2 hours ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

3 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

4 hours ago