தொடங்கியது ‘ஸ்ட்ராபெரி’ சந்திரகிரகணம்.! அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.?
இந்திய நேரபடி, இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை சுமார் 3 மணிநேரம் பெனும்பிரல் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் பிங்க் நிறம்போல கட்சி தருவதால் இந்த கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது
இந்திய நேரப்படி இரவு 11.15 மணிக்கு இந்தாண்டின் இரண்டாவது சந்திரகிரகணம் தொடங்கியது. சூரியன் பூமி சந்திரன் நேர்கோட்டில் அமைவதால் சூரியனின் நிழல் பூமி இடையில் இருப்பதால் நிலவின் மீது படாது அதனால் இந்த சந்திர கிரகணம் உருவாகும். பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், பெனும்பிரல் சந்திர கிரகணம் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.
இன்று நிகழும் சந்திர கிரமானது பெனும்பிரல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதாவது. சூரியனிடம் இருந்து பூமியால் மறைக்கப்பட்ட சந்திரன் பூமியின் பின்புற நிழலில் இருந்து வெளியே வருவதால் இது பெனும்பிரல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. இது பிங்க் நிறம்போல கட்சி தருவதால் ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும் எனவும், இந்தியாவில் வானிலையில் எந்தவித மாற்றமும் இருந்தால் காணலாம் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய நேரத்தின்படி, இன்று இரவு 11.15 மணி முதல் அதிகாலை 2.34 மணி வரை சுமார் 3 மணிநேரம் இந்த சந்திர கிரகணம் தெரியும். இன்று நள்ளிரவு 12.54 மணியளவில் பூமி சந்திரனை முழுதாக மறைத்துவிடும். அப்போது உச்சபட்ச சந்திர கிரகணம் நிகழ வாய்ப்புள்ளது.
இந்த வருடம் ஏற்கனவே ஜனவரியில் முதல் சந்திர கிரகணம் தெரியவந்தது. அடுத்து தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அடுத்ததாக ஜூலை மற்றும் நவம்பர் மதங்களில் தலா ஒரு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் மூலம், இந்தாண்டு மட்டும் 4 சந்திர கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.