அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல்! கனமழைக்கு வாய்ப்பு!
அதி தீவிர புயலாக உருவெடுத்தது ஆம்பன் புயல்.
வங்க கடலில் உருவாகிய ஆம்பன் புயலானது, அதி தீவிர புயலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மாலை இது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலை நிலவரப்படி, ஒடிசாவின் பாரா தீர்ப்புக்கு, தெற்கே 980 கி.மீ தொலைவில், வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்பன் புயல் நாளை மறுநாள் மாலை, மேற்குவங்கத்தில் திக்கா மற்றும் வாங்க தேசத்தின் ஹதியா பகுதியில் கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 180 முதல் 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.