அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும், அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்னும் 12 மணிநேரத்தில் (இன்று மாலை) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த புயல், நாளை மகாராஷ்டிரா-குஜராத் இடையே கரையை கடக்கவுள்ளது.
மேலும், இந்த தாழ்வு மண்டலம், இன்று காலை நிலவரப்படி, மும்பைக்கு தென்மேற்க்கே 550 கி.மி. தொலைவிலும், குஜராத்திலிருந்து 770 கி.மி. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புயலால் வட கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மணிக்கு 95-105 கி.மி. வரை காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…