‘மோச்சா புயல்’ – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..!
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10-ஆம் தேதி புயல் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த புயலுக்கு ‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக மாறி வங்கதேசம்-மியான்மரை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.