மேற்கு வங்கத்தை வெளுத்து வாங்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு வருகிறார். இதனைதொடர்ந்து, அவர் ஒடிசாவில் புயல் பாதிப்புகளை காண புறப்படவுள்ளார்.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல், கடந்த 20 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. 4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி, மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புயலால் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாக மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்குவங்கம் வந்தடைந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்தடைந்த அவரை முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்து வருகிறார். தற்பொழுது இதனை தொடர்ந்து, ஒடிஷா மாநிலத்திலும் புயல் பாதிப்புகளை பார்வையிட அவர் புறப்படவுள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…