வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று நேற்று மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் கரையை கடந்தது. இதனால் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான ஆம்பன் புயலானது, சூப்பர் புயலாக வலுப்பெற்றது. இதனையடுத்து இப்புயல் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. பின் இந்த புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் கரையை கடக்க தொங்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
4 மணிநேரமாக நகர்ந்த இந்த புயல், நேற்று மாலை 6.30 மணியளவில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால், பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த புயலால் கொல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம் நீரில் மூழ்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலால் மரங்கள், மின் கம்பங்கள், வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 10-12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…