மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் வன்முறை நடக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றசாட்டு.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. ஒரு மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி, தான் பேட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக சார்பாக மம்தாவை எதிர்த்து நந்திகிராமில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். நந்திகிராம் தொகுதியில் மம்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சில நேரங்களில் சுவேந்து அதிகாரி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது.
கடந்த 4 நாட்களாக நடந்துவரும் வன்முறைகளில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் 10 பேர் பாஜக ஆதரவாளர்கள் என்றும் அக்கட்சியை சேர்ந்த 5 பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
குறிப்பாக கொல்கத்தாவிலும், வடக்கு 24 பர்கானா மாவட்டத்திலும் இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறியுள்ளன. இதுதொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராக இன்று பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பழைய வீடியோக்களை சமூகவளத்தங்களில் பரப்பி மேற்கு வங்கத்தில் வன்முறை நடத்துவது போல் பாஜகவினர் சித்தரிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றசாட்டியுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் வன்முறை நடக்கவில்லை என்றும் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…