2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம் – மத்திய நிதியமைச்சகம் தகவல்
2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019ஆம் ஆண்டு நிறுத்தி விட்டதாக மாநிலங்களவையில் தகவல்.
2023024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி, பதில் நேரம் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்று அரசு மதிப்பிட்டுள்ளதாகவும் நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.