Stop ADS:ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தை நிறுத்துங்கள்..! கூகுளுக்கு இந்திய அரசு கடிதம் !
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரத்தை நிறுத்தக்கோரி கூகுளிடம் கேட்டுள்ளது இந்திய அரசாங்கம்.
வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கூகுளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக கைவிடுமாறு இந்தியா அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.
ஆன்லைன் கேமிங்கிற்கான இந்தியாவின் கட்டுப்பாடு அனைத்து நிஜ பண விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மேலும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை மட்டும் ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் மற்ற விளையாட்டுகளை விட்டுவிடுங்கள் எனவும் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அக்டோபர் 3 அன்று நடந்த கடைசி ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள் மற்றும் OTT (ஓவர்-தி-டாப்) பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு பந்தைய விளம்பரங்களைக் காட்டுவதை நிறுத்தினர். ஆனால், YouTube மற்றும் Google இது போன்ற பல விளம்பரங்ககளை காட்டுவது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதை உடனடியாக நிறுத்துமாறு கூகுள் நிறுவனத்தை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்று இந்திய அரசாங்கம் கூகுளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.