மேற்குவங்கத்தில் இருந்து வந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து புதிய ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு நடத்தபட்டுள்ளது. இதில் அதிவேக ரயிலின் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. இதுகுறித்து கிழக்கு ரயில்வே சிபிஆர்ஓ கவுசிக் மித்ரா கூறுகையில், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
முன்னதாக ஜனவரி மாதம், டார்ஜிலிங் மாவட்டத்தின் பன்சிதேவா பகுதிக்கு அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மீது கற்கள் வீசப்பட்டதில் ரயிலின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி…
ஆந்திரா: திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, சித்தூர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று தான் கடைசிநாளாகும். இந்நிலையில், திமுக வேட்பாளர்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு…
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி…
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும்…