வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு..! ஒரு மாதத்தில் இரண்டாவது முறை..!
தெலுங்கானா மாநிலத்தில் விசாகப்பட்டினம்-செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் விசாகபட்டினத்திலிருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த அவசரகால ஜன்னலை மாற்ற வேண்டியிருந்ததால், ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15 ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தெலுங்கானா-ஆந்திராவை இணைக்கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். சுமார் 700 கிமீ தொலைவை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 8.30 மணிநேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளது. ஜனவரி 11ம் தேதி விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு மற்றும் சோதனை ஓட்டத்திற்காக ரயில் வந்தபோது இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தது.