கல் வீச்சு சம்பவம்..! பாதுகாப்பு சுவர் கட்டப்படுவதாக புனே ரயில்வே அறிவிப்பு..!
கல் வீச்சு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்புச் சுவர் கட்டப்படுகிறது என்று புனே ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ரயில்களில் கல் வீசும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் புனே ரயில்வே பகுதியில் கல் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2022ல் மட்டும் மொத்தம் 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை குறைப்பதற்கு ரயில் பாதையின் இருபுறமும் பாதுகாப்புச் சுவர் எழுப்ப புனே ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சுவர் கட்டுவதற்கான நிதி பெறப்பட்டு கல் வீசும் இடங்களில் சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 10 கிலோமீட்டர் நீளத்துக்கும், இரண்டு மீட்டர் உயரத்துக்கும் பாதுகாப்புச் சுவர் கட்டப்படும் என்று புனே ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த கல்வீச்சு சம்பவத்தால் இன்று வரை ஏராளமான பயணிகள் காயமடைந்துள்ளனர். கல் வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாக உள்ளனர்.