பங்குச்சந்தை முறைகேடு வழக்கு – சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்!

Default Image

தேசிய பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்.

பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: 

nsc

சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் (NSE phone tapping) கூறப்படும் பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் சித்ரா ராமகிருஷ்ணா கடந்த ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன்:

dhc

சிபிஐ வழக்கில் அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய வழக்கில் அவரது ஜாமீன் மனுவை அமலாக்க இயக்குனரகம் (ED) எதிர்த்து வழக்கு தொடுந்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டு: 

கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம் சாட்டியது.

chitarabail

இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் சித்ரா ராமகிருஷ்ணாவை கடந்தாண்டு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விரிவான உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்