கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 719 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே வர அச்சப்பட்டாலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா இரண்டாம் அலையில் மட்டும் அதிக அளவில் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது இந்திய மருத்துவ சங்கம் தனது பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 32 மருத்துவர்கள் கொரோனா இரண்டாம் அலைக்கும் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகமாக பீகாரில் 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 79 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…