‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!
மகா கும்பமேளாவுக்கு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி பவல் ஜாப்ஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா கும்பமேளா நிகழ்வு நேற்று தொடங்கியது. நேற்று (ஜனவரி 13) முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாட்கள் இந்த கும்பமேளா நிகழ்வு நடைபெறும். இதனை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
குறிப்பாக, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் நிகழ்வு மிக முக்கிய ஆன்மீக நிகழ்வாக உள்ளது. நேற்று முதல் நாளில் மட்டும் 1.6 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மகா கும்பமேளா இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால், 12 ஆண்டுகள் 12வது முறை வருகிறது. அப்படியென்றால் 144வது ஆண்டு என கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை காண உலகில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் உ.பி மாநிலம் பிரயாக்ராஜுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி பவல் ஜாப்ஸ் வந்திருந்தார். அவர் கடந்த ஜனவரி 11இல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை அடுத்து, பிரயாக்ராஜில் உள்ள ஆன்மிகவாதி சுவாமி கைலாசானந்த் கிரி முகாமில் தங்கி இருந்தார்.
அங்கிருந்த பவல் ஜாப்ஸுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, சுவாமி கைலாசானந்த் கிரி கூறுகையில் , ” இந்த அளவு கூட்டத்தை பவல் ஜாப்ஸ் இதுவரை கண்டதில்லை. இந்த சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது உண்மைதான். இருந்தாலும் கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் பாவல் குளிப்பதால் உறுதியாக இருக்கிறார் . ” என அவர் கூறினார்.