#Breaking: ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி- உச்சநீதிமன்றம்

Published by
Surya

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து, 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், நிலைமையை பொறுத்து ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் ஆலையை இயக்கவேண்டுமா? என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், அந்த ஐந்து நிபுணர்களை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

Published by
Surya

Recent Posts

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

25 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

2 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

2 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

3 hours ago