கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தின் கலெக்டர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தனது காருக்கு ரோட்டில் வைத்து தானே ஸ்டெப்னி மாறியுள்ளார், இதைக் கண்டு பொதுமக்கள் பலரும் வியந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பவர்தான் ரோஹினி சிந்தூரி. நேர்மையான தனது நடத்தையால், அதிரடியான நடவடிக்கை எடுப்பவராக இருப்பதாலும், மக்கள் பலரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்ட ஆட்சியரகத்தில் ரோகிணி திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மால் ஒன்றுக்கு சுடிதாருடன் தனது விடுமுறையை கழிப்பதற்காக சாதாரணமாக தனது காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது திடீரென தனது கார் டயர் பஞ்சர் ஆகவே, தன் காரில் இருந்த ஸ்டெப்னி எடுத்து மாட்டிக் கொண்டு இருந்துள்ளார். அதனை கண்ட பொது மக்களில் ஒருவர் இவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரிடம் சென்று நீங்கள் மாவட்ட ஆட்சியர் தானே என கேட்க, அவர் சாதாரணமாக திரும்பி சிரித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் இவ்வளவு சாதாரணமாக ரோட்டில் ஸ்டெப்னி மாட்டி கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் பலரும் வியந்து அவரிடம் சென்று பேசியுள்ளனர். மேலும் இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…