ஜார்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தடுப்பூசியை வீணடிப்பதில் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில், ஒரு கொரோனா தடுப்பூசி குப்பியை எடுத்துக் கொண்டால், அதனை பயன்படுத்தி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள மருந்துகள் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். அந்த வகையில் அதிக அளவில் தடுப்பூசி சில மாநிலங்களில் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் வீணடிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல மாநிலங்கள் அதிகளவு தடுப்பூசி வீணாக்குகின்றனர். நாடு முழுவதும் 6.3% தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 37.3% தடுப்பூசிகளும் வீணடிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கரில் 30.2% தடுப்பூசி வீணடிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகம் 15.5% தடுப்பூசிகளை வீணடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் 10.8 சதவீதம் , மத்திய பிரதேசம் 10.7% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…