மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!
மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,13,37,12,145 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி தடுப்பூசிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 106.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.