புல்லட் ரயில் பாதையில் மழை காலத்தை கையாள அதிநவீன கருவி.! அமைச்சரின் மாஸ்டர் பிளான்..

Bullet Train services

புதுடெல்லி : ரயில்வே போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், மக்கள் ஒரு இடத்திலிருந்து எளிதாக மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அதிவேமாக செல்லும் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், மழை காலங்களில் புல்லட் ரயில்கள் இயங்கும் போது, அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘தானியங்கு மழைப்பொழிவு கண்காணிப்பு கருவியை’ பொருத்தப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிஉள்ளார்.

இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில், “புல்லட் ரயில் சேவைகளின் பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, தானியங்கி மழைப்பொழிவு கண்காணிப்பு அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, மேம்பட்ட கருவி அமைப்புடன் கூடிய மழை அளவீடுகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு குறித்த நிகழ்நேரத் தகவலை வழங்கும்” என்று  தெரிவித்துள்ளார்.

அடிக்கடி மழை பெய்ய கூடிய வாய்ப்புள்ள பகுதிகளில், இந்த மழைப்பொழிவு கண்காணிப்பு அமைப்பு நிறுவப்படும். இந்த அமைப்பு ஒவ்வொரு மணிநேரம் அப்டேட் மட்டுமல்லாமல், 24-மணி நேரமும் மழைப்பொழிவை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப ரயில் வேகத்தை சரிசெய்ய தேவையான நெறிமுறைகளை வழங்க உதவுகிறது.

புல்லட் ரயிலின் எதிர்பார்க்கப்படும் வேகமான 320 கிமீ வேகத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மிக முக்கியமானது, இதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று கூறிஉள்ளார். மேலும், சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான 50 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய முதல் கட்டம் ஆகஸ்ட் 2026 இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்