மாநிலங்களவை தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எல்.முருகன்!
மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய பிரதேச எம்.பி.யாக தேர்வாகிறார் எல்.முருகன்.
அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் தேர்வாகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாததால், எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு 27-ம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்கு பிறகு எல்.முருகன் போட்டியின்றி தேர்வு பெறுவதை தேர்தல் கமிஷன் முறைப்படி அறிவிக்கும் என தகவல் கூறப்படுகிறது.