8 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரத்தை மாற்ற முடியாது -நாடளுமன்ற குழுவில் தகவல்

ஒரு சில மாநிலங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை நேரத்தை மாற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழு கூட்டம் பாஜக எம்.பி. பார்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் ,மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் கொரோனாவிற்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
ஆனால் இந்த கூட்டத்தில் 9 மாநிலங்கள் தொழிலாளர் சட்டத்தில் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்று இருப்பதை 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.ஆனால் இதற்கு தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முடிவில் இருந்து மாநிலங்கள் பின்வாங்கியுள்ளது.இதனையடுத்து 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டுமானால், அது தொழிலாளர்களின் சம்மதத்துடன் செய்யப்பட வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025