“மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் மாநிலங்கள் ஊரடங்கு அறிவிக்க கூடாது!”- மத்திய அரசு
மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது.
தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31 -ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 31- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.