புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
இதனிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்ல தொடங்கினார்கள். இப்படி சென்ற தொழிலாளர்களில் பலர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு தேவை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன. உணவு மற்றும் குடிநீரும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது என்று கூறியது.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரயில்வேத்துறை உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…