பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார்.
பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மகேந்திரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீகாரில் ஆர்ஜேடி ஆட்சியை இழந்தபோது, மகேந்திர பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவரை ராஜ்யசபாவுக்கு தொடர்ந்து மூன்று முறை எம்பியாக நியமிக்கப்பட்டார்.
ராஜ்யசபாவில் அவருக்கு இன்னும் இரண்டாண்டு பதவி காலம் இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. மகேந்திரனின் மறைவால் அரசியல் மற்றும் தொழில்துறையில் உலகம் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது என்று நிதிஷ்குமார் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…