டெல்லியில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன்!

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கு, மெட்ரோ ரயில் மற்றும் சாலை பணிகளுக்காக பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்காக நன்றியை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025