பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு.!
- பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- அனைத்து வங்கிகளும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று ரிசவ் வாங்கி உத்தரவிட்டது.
பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி வீட்டு வசதி கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 8.15% சதவீதத்திலிருந்து தற்போது 7.90% சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 7.80 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து அந்த வங்கியிடம் ஏற்கனவே வாங்கியுள்ள சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனின் வட்டி விகிதம் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை 1.35 சதவீதம் அளவிற்கு ரிசர்வ் வங்கி குறைத்தது. இந்த வட்டி குறைப்பின் பலனை இதர வங்கிகள் தங்களது வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தாங்கள் நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தையே அனைத்து வங்கிகளும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று ரிசவ் வாங்கி உத்தரவிட்டது.