முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சனில் கைவைத்த ஸ்டேட் வங்கி.!

Default Image

உடல் ஊனமுற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, வருமான வரி பிடித்தம் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம். ஆனால் அதை மீறுகிறது ஸ்டேட் வங்கி என புகார் எழுந்துள்ளது. இதனிடையே வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது என கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை ராணுவ தலைமையகம், நிதித்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைத்தது. இருந்தபோதிலும் அதிகார எல்லையை மீறுகிறதா, ஸ்டேட் வங்கி? என்றும் குறைந்த வைப்புத்தொகை வைத்ததாக பல கோடி ரூபாயை பிடித்த ஸ்டேட் வங்கி முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சனில் கைவைத்துள்ளது. வெறும் ரூ.100 மட்டும் பென்சன் தொகையாக வழங்கியுள்ளது. இதனால் உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்