இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது கூட்டாட்சிக்கு உதாரணமாக உள்ளது.
தற்போது, சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனிடையே, நாட்டில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்த இரண்டு ஒத்திகை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…